அண்ணாமலை உருவாக்குவது "தலைவர்களையா"அல்லது "குண்டாக்களையா"? - காயத்ரி ரகுராம் கேள்வி..!!
Gayatri Raghuram criticized TNBJP president annamalai
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி அவதூறாக சமூக வலைதளங்களில் பேசி வருவதாக நடிகை காயத்ரி ரகுராம் மீது பாஜகவினர் புகார் அளித்தனர். முன்னதாக காயத்ரி ரகுராம் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றம்சாட்டி அக்கட்சியில் இருந்து விலகிய பின் தொடர்ந்து அண்ணாமலை மற்றும் அவரது ஆதரவாளர்களை ட்விட்டரில் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

அண்ணாமலை மீது சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பி வரும் நடிகை காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் தமிழக பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. பிறகு உடனடியாக அந்த புகார் வாபஸ் வாங்கப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்த பாஜக நிர்வாகிகள் பொது வாழ்வில் விமர்சனங்களைத் தாங்குவதற்கான மன வலிமை வேண்டும். சகிப்புத்தன்மையும், மன வலிமையும்தான் பிரதமர், அவரைப் பின்பற்றும் மாநிலத் தலைவரின் சித்தாந்தம். எல்லோரும்தான் விமர்சனங்களை வைக்கிறார்கள், கடினமான சொற்களைப் பயன்படுத்துகிறார்கள்.
அப்படியானால் எல்லோர் மீதும் வழக்கு தொடுக்க வேண்டும். அதனால் இவர்கள்மீது மட்டும் ஏன் கொடுக்க வேண்டும். நமக்கு நிறைய வேலைகள் இருக்கிறது. இதைப் புறம் தள்ளுவோம் என்று தலைமை நிர்வாகிகள் அறிவுறுத்தினார்கள். அதனால் வாபஸ் வாங்கினோம் என விளக்கம் அளித்திருந்தனர்.

இந்த நிலையில் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் "நைனார் நாகேந்திரன் அண்ணா, “அதிமுகவில் இருந்து ஏன் வெளியேறி பாஜகவில் இணைந்தேன் என்று தெரியவில்லை”. எச்.ராஜா அண்ணா - “தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன்”. வானதி அக்கா, கலயான் ஜியைத் தாக்கும் வார்ரூம். அண்ணாமலை புதிய தலைவர்களை உருவாக்குகிறாரா அல்லது மோசடியாளர்களை, குண்டாக்களை உருவாக்குகிறாரா?" என கேள்வி எழுப்பு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மற்றொரு பதிவில் "ஸ்டெர்லைட் பிரச்னை, கலாக்ஷேத்ரா மாணவர்கள் பிரச்னை, அதானி பிரச்னை, போலி நிறுவனங்கள் பிரச்னை என பாஜக அமைதியாக இருக்கிறது. What’s cooking?" கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். காயத்ரி ரகுராம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை தொடர்ந்து விமர்சனம் செய்து வருவது ஆதரவாளர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.
English Summary
Gayatri Raghuram criticized TNBJP president annamalai