இபிஎஸ் உடன் சந்திப்பு | ஜிகே வாசன் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, இன்று நேரில் சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆலோசனை செய்தார்.

இந்த ஆலோசனைக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த கி.கே.வாசன் தெரிவிக்கையில், "இந்த இடைத்தேர்தலில் தேர்தலில் நிச்சயம் மாற்றம் நிகழும்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் திமுக மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இது இந்த இடைத்தேர்தலில் நிச்சயம் மாற்றத்தை உண்டாக்கும்.

தமிழகத்தில் திமுகவை எதிர்த்து வாக்களிக்க மக்கள் தயாராகி வருகின்றனர். தமிழக மக்கள் மீது அதிக சுமைகளை ஏற்றிய திமுக அரசுக்கு இந்த இடைத்தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

பிரதான எதிர்க்கட்சியுடன் கூட்டணி சேர்ந்து திமுகவிற்கு பாடம் கற்று தர வேண்டும். மக்கள் நினைக்கும் மாற்றம் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் உறுதியாக ஏற்படும்.

மக்களை ஏமாற்றிய அரசாக திமுக அரசு உள்ளதால் மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர். நாளுக்கு நாள் திமுகவிற்கு எதிராக ஓட்டு போட மக்கள் தயாராக உள்ளார்கள். இதனை வருகின்ற தேர்தலில் மக்கள் எதிரொலிப்பார்கள்" என்று, ஜி.கே.வாசன் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GK Vasan meet ADMK EPS Press meet 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->