#சற்றுமுன் || பாமக தலைவர் ஜிகே மணி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal



வரும் மே 28-ஆம் தேதி சென்னையில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளதாக, அக்கட்சியின் தலைவர் ஜி கே மணி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிவிப்பில், "பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் வரும் 28.05.2022-ஆம் நாள் சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு சென்னையை அடுத்த திருவேற்காடு ஜி.பி.என். பேலஸ்  திருமண அரங்கத்தில் நடைபெறும்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா, பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்கிறார். 

பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன்,  பொருளாளர் திலகபாமா ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பா.ம.க. மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், பாட்டாளி மக்கள் கட்சியின் பல்வேறு அணிகளின் அனைத்து நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள்.

சார்பு அமைப்புகளான வ.ச., ச.மு.ச. ஆகியவற்றின் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகளும்  இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பார்கள்."

இவ்வாறு அந்த அறிவிப்பில் ஜி கே மணி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GKMani announce may 28 meeting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->