நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்பட்டுகிறது!! காவல்துறை மீது பரபரப்பு குற்றச்சாட்டு!!
Governor House alleged that fair investigation was conducted in petrol bomb incident
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் மீது நேற்று பிற்பகல் கருக்கா வினோத் என்ற நபர் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் பெரும் சர்ச்சையை திருப்பி உள்ளது. இவர் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி வேறொரு வழக்கில் சிறையில் இருந்து ஜாமினில் விடுதலையான நிலையில் நேற்று பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட கருக்கா வினோத்தை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் நீண்ட நாட்களாக சிறையில் வாடும் கைதிகள் விடுதலை மற்றும் நீட் தேர்வு விலக்கு மசோதாக்களுக்கு ஆளுநர் கையெழுத்திடாததால் பெட்ரோல் குண்டு வீசியதாக வாக்குமூலம் அளித்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் நீதிபதியின் முன்பு ஆஜர் படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கருக்கா வினோத்தின் பின்னணி குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் ஆளுநர் மாளிகையில் இருந்து இன்று வெளியாகி உள்ள அறிக்கையில் "ராஜ்பவனின் தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை. தன்னிச்சையாக பதிவு செய்யப்பட்ட புகார், தாக்குதலை சாதாரண நாசக்கார செயலாக நீர்த்துப்போக செய்துவிட்டது.
அவசரக் கதியில் கைது மேற்கொள்ளப்பட்டு மாஜிஸ்திரேட் நள்ளிரவில் எழுப்பி குற்றம் சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டு விட்டதால் பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக்கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது" என காவல்துறை விசாரணை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
English Summary
Governor House alleged that fair investigation was conducted in petrol bomb incident