திமுகவின் காலை வாரிய ஆளுநர் தமிழிசை.?! 'காலை டிபன் திட்டம் பாஜகவுடையதா.?!'
governor thamilisai soundararajan about dmks free breakfast scheme
அரசுப் பள்ளியில் பயிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை இன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் துவங்கி வைத்தார்.
தமிழகத்தில் இருக்கும் 38 மாவட்டங்களில் இந்த காலை உணவு திட்டத்தை துவங்க முதல் கட்டமாக ரூ.33.56 கோடிகள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்டாலின், அரசு பள்ளிக்கு சென்று குழந்தைகளுடன் உணவு உண்டு, அவர்களுக்கு உணவு பரிமாறி இந்த திட்டத்தை துவங்கி வைத்தார்.
இந்நிலையில், இந்த திட்டம் குறித்து ஆளுநர் தமிழிசை தனது ட்வீட்டர் பக்கத்தில்," 2020 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய தேசிய கல்விக் கொள்கையில் மதிய உணவுவுடன் காலை சிற்றுண்டி குழந்தைகளுக்கு கொடுக்க வலியுறுத்தியது.
தாய்மொழி உணர்வுடன் கூடிய, உலகத்தரம் வாய்ந்த கல்வியும், காலை மற்றும் மதிய உணவுவுடன் கற்பிக்கப்படுவதால் வளமான வலிமையான எதிர்கால பாரதத்தை உருவாக்க முடியும்." என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
governor thamilisai soundararajan about dmks free breakfast scheme