தமிழகத்தில் குடியரசு தினத்தன்று நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம் ரத்து - தமிழக அரசு.!
GramaSaba TNGovt
தமிழகத்தில் குடியரசு தினத்தன்று நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ளாட்சி பகுதிகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்தும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கிராம சபை கூட்டமானது.,
ஜனவரி மாதம் 26ம் தேதி குடியரசு தினம்,
மே மாதம் ஒன்றாம் தேதி உழைப்பாளர் தினம்,
ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி சுதந்திர தினம்,
அக்டோபர் மாதம் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்றும் நடத்தப்பட்டு வருகின்றன.
வருடத்திற்கு நான்கு முறை கூட்டப்படும் இந்த கிராம சபை கூட்டத்தில் உள்ளாட்சி பகுதிகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும், கிராமத்தில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதம் செய்யப்படும்.
மேலும் இந்த கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த நிலையில், வருகின்ற குடியரசு தினத்தன்று, தமிழகத்தில் உள்ள கிராமங்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஆண்டு குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.