குஜராத்தில் ஒரு 'அமமுக, நாதக' - வெற்றியை பறித்த சோகம்! கருத்து கணிப்பால் கதிகலங்கி நிற்கும் கட்சி! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தின் சட்டமன்ற பொதுத்தேர்தலில் வாக்குப்பதிவு இன்று நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.

அதன்படி குஜராத் மாநிலத்தில் ஏழாவது முறையாக பாஜக பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. குஜராத் சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை இந்த முறை ஆம் ஆத்மி கட்சி பெரிய அளவில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒன்று முதல் ஐந்து இடங்களை மட்டுமே பிடிக்க வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சி 40க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆளுகின்ற பாஜக 120 இடங்கள் முதல் 140 இடங்கள் வரை வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றன. 

கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிடும் செய்தி நிறுவனங்கள் ஒரு முக்கிய தகவல் ஒன்றையும் தெரிவித்துள்ளன. அதன்படி காங்கிரஸ் கட்சி வெற்றி பெறக்கூடிய தொகுதிகளில், ஆம் ஆத்மி கணிசமான வாக்குகளை பிரித்து காங்கிரஸ் கட்சியை தோல்வியடைய வைத்துள்ளதாக தெரிவிக்கின்றன.

இதன் காரணமாகவே பாஜக பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளதாகவும் இந்த கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுகவின் வெற்றி பெற வேண்டிய தொகுதிகளில் தோல்வியடைய வைத்த பெரும்பங்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு சேரும்.

அதிமுகவிலிருந்து ஓபிஎஸ், இபிஎஸ்.,யால் வெளியற்றப்பட்ட டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அந்த தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும், அதிமுக வெற்றி பெற வேண்டிய தொகுதிகளில், கணிசமான வாக்குகளை பிரித்து அதிமுகவின் வெற்றியை பறித்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவதாக நாம் தமிழர் கட்சியும், மூன்றாவதாக மக்கள் நீதி மையமும் கணிசமான வாக்குகளை பிரித்து, அதிமுகவின் வெற்றியை பறித்தன என்று சொன்னால் மிகையாகாது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat Election 2022 Exit poll AAP BJP Congres


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->