வரலாற்றை மாற்றி அமைக்கும் பாஜக | பெரும் அதிர்ச்சியில் காங்கிரஸ், சோகத்தில் ஆம் ஆத்மி! - Seithipunal
Seithipunal


குஜராத் இமாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 182 சட்டசபைத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதேபோல், இமாச்சலப் பிரதேசத்தில் 68 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. 

இந்த இரண்டு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வரும் 8ந் தேதி வெளியாகின்றன. இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.

இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் 35 இடங்களில் வெற்றி பெற்றால் பெரும்பான்மை ஆகும். வெளியான கருத்து கணிப்புகளின்படி. 

ரிபப்ளிக் டிவி : பாஜக 34-39, காங்கிரஸ்  28-33, ஆம் ஆத்மி  0-1,  மற்றவை 1-4.
டைம்ஸ் நவ் : பாஜக - 38, காங்கிரஸ் - 28, ஆம் ஆத்மி - 0,  மற்றவை - 2.
நியூஸ் எக்ஸ் : பாஜக 32-40, காங்கிரஸ் 27-34, ஆம் ஆத்மி - 0,  மற்றவை 1-2.
இந்திய டிவி : பாஜக 15-19, காங்கிரஸ் 14-18, ஆம் ஆத்மி - 0,  மற்றவை 0-2.
ஜீ நியூஸ் : பாஜக 35-40, காங்கிரஸ் 20-25, ஆம் ஆத்மி 0-3,  மற்றவை 1-5.

இமாச்சலப் பிரதேசத்தில் இதுவரை நடந்த தேர்தல்களில் ஒருமுறை காங்கிரஸ் வெற்றி பெற்றால், மறுமுறை பாஜக வெற்றி பெறுவது வழக்கம். ஆனால் இந்தமுறை பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.

குஜராத் மாநிலத்தை பொறுத்தவரை மொத்தம் உள்ள 182 சட்டசபை தேர்தலை பொறுத்தவரை பாஜக பெரும்பான்மையுடன் 7 வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளதாக அனைத்து கருத்து கணிப்புகளும் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சி வலுவான எதிர்க்கட்சியாக வரும் என்றும், ஆம் ஆத்மீ கட்சி ஒற்றை இலக்கத்தில் தான் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat Himachal Pradesh exit poll 2022


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->