திமுக அரசை மக்கள் தூக்கி எறிய வேண்டும் - எச்.ராஜா பேட்டி! - Seithipunal
Seithipunal


திமுக அரசை மக்கள் தூக்கி எறிய வேண்டும் என்று பாஜக உயர்மட்ட கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த எச் ராஜா தெரிவித்துள்ளார். 

தமிழக பாஜகவின் உயர்மட்ட குழு கூட்டம் இன்று சென்னை கமலாலயத்தில் நடைபெற்றது.

தமிழக பாஜகவின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச் ராஜா தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்தும், கட்சியின் விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிகிறது.

இந்த கூட்டம் முடிந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த எச் ராஜா தெரிவிக்கையில், "திமுக அனைத்து துறைகளிலும் விவகாரத்திலும் தோற்றுப் போய்விட்டது.

அரசு நிர்வாகத்தில் முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும். தூத்துக்குடி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கனிமொழியின் இதுவரை கண்டிக்கவில்லை. தேர்தல் கூட்டணி குறித்து பாஜகவின் டெல்லி தலைமை தான் முடிவு செய்யும்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

H Raja say about DMK mkstalin Govt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->