திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி ஆட்சி நடத்துகிறது - ஹெச்.ராஜா காட்டமான பேச்சு.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் 8 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் தேனியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா பேசியதாவது, 

"நாம் மக்களிடம் பாஜக அரசின் சாதனைகளோடு திமுக அரசின் வேதனைகளையும் எடுத்துக்கூற வேண்டும். மத்திய அரசின் சாதனைகளான,

> 43 கோடி மக்களுக்கு ஜன்தன்வங்கி கணக்கு, 
> 12 கோடி கழிப்பறை, 
> 9 கோடி குடும்பங்களுக்கு இலவச கேஸ் இணைப்பு
> தமிழகத்தில் உட்கட்டமைப்பு திட்டங்களில் ரூ. 1 லட்சம் கோடி மத்திய அரசு முதலீடு உள்ளிட்ட  மத்திய பா.ஜ.க அரசால் ஏழை மக்களின் நலனுக்கான திட்டங்களை கொடுத்துள்ளது.

ஆனால், நேரு முதல் கருணாநிதி வரை இந்திய நிலப்பரப்புகளை மற்ற நாடுகளுக்கு தாரைவார்த்து கொடுத்ததை தான் சாதனையாக சொல்லி கொன்று இருக்கின்றனர் கூறி கொள்கின்றனர்.

அவர்கள் கொடுத்ததை பிரதமர் மோடி தற்போது மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மத்திய அரசின் அனைத்து திட்டங்களிலும் இந்த திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி ஆட்சி நடத்துகிறது" என்று ஹெச் ராஜா பேசினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

h raja say dmk sticker govt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->