ஹரியானா தேர்தல் தோல்வியை ஏற்க முடியாது - ஜெய்ராம் ரமேஷ், ராகுல்காந்தி பேட்டி! - Seithipunal
Seithipunal


ஹரியானா தேர்தல் முடிவுக்கான தீர்ப்பு மாநில மக்களின் விருப்பத்திற்கு எதிராக உள்ளதாக. சற்று முன்பு செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், ஹரியானாவில் மூன்று மாவட்டங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து புகார்கள் வந்துள்ளது. 

இந்த தேர்தல் முடிவு எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுக்கிறது. வேட்பாளர்களின் புகார் மனுக்களைதேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க உள்ளோம்.

ஹரியானாவின் தேர்தல் முடிவுகளை காங்கிரஸ் கட்சி ஏற்காது. ஏற்கனவே இது குறித்து நாங்கள் தேர்தல் ஆணையத்திற்கு புகார் ஒன்றை அழுத்துள்ளோம். அது குறித்து அவர்கள் அளித்த பதிலுக்கு நாங்கள் மீண்டும் பதில் அளித்து கடிதம் எழுத இருக்கிறோம். 

ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை பெறக்கூடாது என்று பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் மீட்டுக் கொண்டு வருவதே எங்களின் முதன்மையான நோக்கமாக இருக்கும்" என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hariyana Election Result Congress


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->