தவெக -இல் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாரா..? சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி..!
Has Adhav Arjun been suspended from the TVK
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா கடந்த ஜனவரி மாதம் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அக்கட்சியில் அவருக்கு தேர்தல் பிரிவு பொதுச்செயலாளராக பதவி வழங்கப்பட்டு, செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், தவெகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டதாக இன்று சமூகவலைதளத்தில் தகவல்கள் பரவின. இதனால், தவெக வட்டாரத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்படதாக வெளியான தகவலுக்கு தவெக மறுப்பு தெரிவித்துள்ளது. இவ்வாறு பரவிய தகவல் வதந்தி என்றும், சமூகவலைதளத்தில் போலி செய்தி பரவி வருவதாகவும் தவெக கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Has Adhav Arjun been suspended from the TVK