இறுதியில் வென்ற ஓபிஎஸ்.. நீதிமன்றம் விதித்த தடை.. எடப்பாடி பழனிசாமிக்கு திடீர் பின்னடைவு.! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் இன்று பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதனிடையே ஒன்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. தலைமையை கைப்பற்ற ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடிபழனிசாமி இடையே உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது. 

தலைமையை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். ஓ பன்னீர்செல்வம் இரட்டைத் தலைமையே  தொடர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். இதனிடையே கடந்த 9-வது நாளாக ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினர்.

அதிமுகவில் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட அளவே ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே அதிமுக பொதுக்குழுகூட்டத்திற்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து, ஓ பன்னீர்செல்வம் சார்பில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் நேற்று நள்ளிரவு விசாரணை நடைபெற்றது. 

விடிய விடிய நடந்த மேல்முறையீட்டு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை இல்லை. அதிமுக பொதுக் குழுவில் 23 தீர்மானங்கள் தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.  இன்றைய அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எவ்வித தடையும் விதிக்கவில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அதிமுகவின் மூத்த தலைவர்களை வசப்படுத்தும் எடப்பாடி பழனிசாமிக்கு தலைமை விவகாரம் தற்போது கானல் நீர் போல் ஆகி உள்ளது. தனி தீர்மானங்களுக்கு தடை வைக்கப்பட்டுள்ளதால், எடப்பாடி பழனிசாமியின் பொது செயலாளர் கனவுக்கு நீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டுள்ளது. இதையடுத்து, ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hc judgment eps sad


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->