கோவையில் கொட்டித் தீர்த்த பலத்த கனமழை!...வியாபாரிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதி!
Heavy rain in coimbatore traders and motorists are suffering
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சிவானந்தா காலனி ரயில்வே மேம்பாலத்தில் தேங்கி நின்ற மழை நீரில் தனியார் பேருந்து ஒன்று சிக்கிக்கொண்டது.
இந்த நிலையில், கோவையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்துது. கோவையில் உள்ள அவினாசி ரோடு, நஞ்சப்பா ரொடு, ரெயில் நிலைய சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பணி முடிந்து வீடு திரும்புபவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.
மேலும், தீபாவளிக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இதனை நம்பி வியாபாரத்தில் இறங்கியுள்ள வியாபாரிகள் கனமழை பெய்ததால் வேதனை அடைந்தனர்.
English Summary
Heavy rain in coimbatore traders and motorists are suffering