தேமுதிக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 10 தீர்மானங்கள் இதோ! - Seithipunal
Seithipunal


2026 தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக  பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் கட்சியினை தீவிரப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்து தேர்தலை எதிர்கொண்டது. தற்போது, அ.தி.மு.க கூட்டணியிலேயே தே.மு.தி.க. நீடித்து வருகிறது

இந்த நிலையில், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் இன்று கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீர்மானங்கள் பின்வருமாறு :

* தமிழ்நாடு முழுவதும் இருந்து தேமுதிக  கழகத்தினரும், பொதுமக்களும் கலந்து கொண்டு, அனைவரும் ஒன்று சேர்ந்து விஜயகாந்த் நினைவு நாளை வருடம் தோறும் அஞ்சலி செலுத்துவோம்.

* தமிழக மக்களுக்காக கேப்டன் கொண்ட லட்சியத்தை நிறைவேற்றிட வேண்டும்

* பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

* மின்சாரக்கட்டணம் உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம்.

* பாலியல் வன்கொடுமையையும் தடுக்கும் விதத்தில் மத்திய, மாநில அரசுகள் கடுமையான சட்டத்தால் தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* போர்க்கால அடிப்படையில் திட்டங்களை தீட்டி, சாலைகள் மற்றும் போக்குவரத்தை திறம்பட செயல்படுத்த வேண்டும்.

* மாநகராட்சி சொத்து வரியை மீண்டும் அதிகமாக உயர்த்தி, மக்களுக்கு கடுமையான சுமையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதை கண்டித்து தீர்மானம்.

* கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட ஏற்பாடுகள் செய்வதை கைவிட்டு விட்டு, தமிழக விவசாயிகளும், கர்நாடகா விவசாயிகளும் பயன்பெறுகின்ற வகையில் ராசிமணல் என்ற இடத்தில் அணை கட்டினால் இரண்டு மாநிலமும் நீர் வசதி பெறுகின்ற வகையில் தீர்வு காண வேண்டும்.

* டாக்டர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு சம்பளம் உயர்வும், ஆசியர்களுக்கு பழைய ஊதியம் மற்றும் அரசு ஊழியர்களுடைய பல்வேறு கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும்.

* தமிழகத்தில் கனிமவள கொள்ளை நாளுக்கு நாள் அதிகரிப்பதையும் தென்காசி மாவட்டத்திலிருந்து கன்னியாகுமரி வழியாக கனரக வாகனங்கள் மூலம் கேரளா மாநிலத்திற்கு கனிம வளம் கடத்திச் செல்லப்படுவதை தடுக்க தடுக்க வேண்டும் ஆகிய 10 தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Here are 10 resolutions passed in the dmdk meeting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->