மறைமுகத் தேர்தல்.. மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!
high court new order for mayor and deputy mayor election
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, அப்போது பதிவான வாக்குகள் கடந்த 22 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில், திமுக பெருவாரியான இடங்களை கைப்பற்றியது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அனைத்து மாநகராட்சிகளிலும் திமுக கைப்பற்றியுள்ளது. 21 மாநகராட்சிகளிலும் திமுக தன் வசமாக்கி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளது.
சென்னை மாநகராட்சியில் மார்ச் 4 ஆம் தேதி அன்று காலை 9.30 மணிக்கு மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலும், பிற்பகல் 2.30 மணிக்கு துணை மேயரான மறைமுக தேர்தல் நடைபெறும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மறைமுக தேர்தல் அமைதியான முறையில் நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடவடிக்கையை கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்படும். தற்போது தேர்தலை தள்ளி வைக்கும் திட்டம் இல்லை என உயர்நீதி மன்றத்தின் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
English Summary
high court new order for mayor and deputy mayor election