செல்போன் உற்பத்தியில் இந்தியா 2வது இடம் - பிரதமர் மோடி!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் 5ம் கட்ட மக்களுக்கு நடைபெற்று முடிந்துள்ளது. ஆறாம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் வேட்பாளர்கள் தீவிரம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

 இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். பேட்டியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், வாரிசு அரசியலைக் கொண்ட எதிர்க்கட்சிகள் இளைஞர்களிடமிருந்து மிகவும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. களத்தின் உண்மையான நிலவரத்தை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

மத்திய அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. 2014 ஆம் ஆண்டுக்கு சில நூறு ஷாட் அப் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன.ஆனால், தற்போது 1.25 லட்சம் நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு ஷாட் அப் நிறுவனங்களிலும் 20 முதல் 25 வரை உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பட்டுள்ளது. கடந்த 6 முதல் 7 ஆண்டுகளில் ஆறு கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என்று தரவுகள் கூறுகின்றது.

 உலகளவில் செல்போன் தயாரிப்பதில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம். முன்பு நாம் செல்போன்களை இறக்குமதி செய்து கொண்டிருந்தோம். ஆனால் தற்போது செல்போன் ஏற்றுமதி இரண்டாவது நாடாக இந்தியா திகழ்கிறது. உலகில் தயாரிக்கப்படும் ஏழு ஐபோன்களில் ஒன்று இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Highest mobile manufacturing India second place


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->