வைரலாகும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் வீடியோ! பகிர்ந்து கேள்வி எழுப்பிய CM மு.க.ஸ்டாலின்!
hindi issue PTR Palanivel Thiagarajan video viral
மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டுக்கு நிதி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் கூறியிருப்பது, தமிழக அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
அதே சமயத்தில் மும்மொழி கொள்கை இந்தி திணிப்பு அல்ல, மாணவர்கள் விரும்பிய மொழியை கற்றுக்கொள்வது அவசியம்” என்று தொடர்ந்து பாஜக வலியுறுத்தி வருகிறது.
மேலும், தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி மொழி கற்பிக்கப்படுவதாகவும், அரசு பள்ளிகளில் மட்டும் தி.மு.க. திட்டமிட்டு இந்தியை தடுப்பதாகவும் பாஜக குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்த நிலையில், மத்திய அமைச்சரின் கருத்துக்கு தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து பேசும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், "தமிழ்நாடு எந்த காலத்திலும் மும்மொழி கொள்கையை ஏற்காது. எங்கள் குழந்தைகள் எந்த மொழியை வேண்டுமோ அதை கற்கட்டும். ஆனால், தமிழ்நாடு அரசு தமிழ் மற்றும் ஆங்கிலத்தையே கல்வியில் முன்னிலைப் படுத்தும். வட மாநிலங்களில் உள்ள பிள்ளைகள் எத்தனை பேர் மும்மொழி பயின்று வருகிறார்கள்? அந்த மூன்றாவது மொழி என்ன? என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் இதை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, "தமிழ்நாடு மீது மொழித் திணிப்பு ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
hindi issue PTR Palanivel Thiagarajan video viral