என் சாவுக்கு அந்த 3 பேர் தான் காரணம்.. விஷம் குடித்து இந்து மக்கள் கட்சி நிர்வாகி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டம் செல்வபுரம் பகுதியை சேர்ந்த ஜோதிடர் பிரசன்னசாமி (வயது 41) இந்து மக்கள் கட்சியின் ஜோதிடர் பிரிவு துணை தலைவராக இருந்து வந்தார் . இந்நிலையில் பிரசன்னசாமி, அவரது மனைவி அஸ்வினி ஆகியோர் 25 லட்சம் பணம் மற்றும் 15 பவுன் நகை மோசடி செய்துள்ளதாக சென்னையை சேர்ந்த கருப்பையா என்பவர் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் .

அந்த புகாரின் பேரில் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பிரசன்னசாமி ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் ஜாமீன் கிடைக்கவில்லை. மோசடி புகாரால் மிகுந்த மனவேதனை அடைந்த பிரசன்னசாமி மற்றும் அவரது மனைவி அஸ்வினி, தாய் கிருஷ்ணகுமாரி, பிரசன்னசாமியின் மகள் ஆகியோர் கடந்த 3ஆம் தேதி விஷம் குடித்தனர்.

தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரசன்னசாமியின் தாய் கிருஷ்ணகுமாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து பிரசன்னசாமி, அவரது மனைவி அஸ்வினி அவர்களது மகள் ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு பிரசன்னசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடல் மருத்துவமனையில் இருந்து உடற்கூறாய்வுக்காக பிரேத கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையறிந்த பிரசன்னசாமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது பந்தய சாலை போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை அடுத்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hindu makkal katchi person drunk poison and death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->