இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கைது.! - Seithipunal
Seithipunal


இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் திடீரென கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று கன்னியாகுமரியில் இருந்து தனது ஒற்றுமை யாத்திரையை என்ற பயணத்தை தொடங்க உள்ளார். இதற்காக கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த யாத்திரையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிலையில் ராகுல் காந்தியின் யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் சென்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

கோவையில் இருந்து கன்னியாகுமரிக்கு ரயிலில் சென்ற அர்ஜூன் சம்பத்தை திண்டுக்கல்லில் வைத்து போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hindu People's Party leader Arjun Sampath arrested.


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->