20 ஆண்டுகளாக தனது மொபைல் போன் ஒட்டு கேட்கப்படுகிறது; சீமான் அதிர்ச்சி தகவல்..! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தனது செல்போனை தமிழக அரசு ஒட்டுக்கேட்பதாக கூறியிருந்தார். இது தொடர்பில் சீமானிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ''இந்த நாட்டில் தனி மனித சுதந்திரம் இல்லை. எது ஒன்றையும் பதிவு செய்வார்கள்'' என சீமான் பதில் அளித்தார்.

அத்துடன், கூட்டாட்சி, கூட்டணி ஆட்சி எல்லாம் எங்களுக்கு வேண்டியது இல்லை. எங்களுக்கு தேவை நல்லாட்சி. நாட்டுக்கும், மக்களுக்கும் விரும்பிய ஆட்சி என்று சீமான் தெரிவித்தார்.

மேலும், '' அ.தி.மு.க., கண்ணீர் அஞ்சலி போராட்டம் நடத்துகின்றனர். தேர்தல் வரும்போது இது போன்ற நாடகங்களை பார்த்து தான் ஆக வேண்டும். இந்த நாட்டில் அனைத்தும் நீதிமன்றம் மூலம் தான் நிறைவேற்றப்படுகிறது''என்றும் சீமான் பேசினார்.

அத்துடன்,  நயினார் நாகேந்திரனின் மொபைல் போன் ஒட்டு கேட்பது தொடர்பில் சீமான் நிருபர்களுக்கு பதிலளிக்கையில், ''இன்றைக்கு தான் நயினார் நாகேந்திரன் பார்க்கிறார் போல, எனது மொபைல் போனை 20 வருடமாக கேட்கிறார்கள். இந்திய அளவில் ஒட்டு கேட்கப்படும் 50 தலைவர்களில் நான் ஒருவனாக இருந்தேன். தமிழகத்தில் என்னுடையது எல்லாம் ரொம்ப நாளாக ஒட்டு கேட்கப்படுகிறது. இந்த நாட்டில் தனி மனித சுதந்திரம் இல்லை. எது ஒன்றையும் பதிவு செய்வார்கள்.'' என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

His mobile phone has been tapped for 20 years Seeman shocking information


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->