ஏன் இப்படி? 'கேஸ் சிலிண்டர் விலையால் இல்லத்தரசிகள் விழிப்பிதுங்கி கிடக்கின்றனர்!!!'- பிரேமலதா விஜயகாந்த்
Housewives felt bad due price gas cylinders Premalatha Vijayakanth
தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் காஸ் சிலிண்டர் விலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியதாவது,"வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.

எரிவாயு சிலிண்டர் குறையும் என்று சொல்லிக்கொண்டு இருந்தாலும், விலை குறையவே இல்லை.சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்து கொண்டுதான் போகிறது.
அதனால் இன்றைக்கு இல்லத்தரசிகள் மிகவும் சிறமப்படக்கூடிய நிலைமையிலும், தொடர்ந்து விலைவாசி உயர்வு என்பது அவர்களை விழி பிதுங்கச் செய்துள்ளது.
எனவே மத்திய, மாநில அரசுகள் விலை உயர்வை பரிசீலனை செய்து பெண்களினுடைய கஷ்டத்தை உணர்ந்து, சிலிண்டர் எரிவாயு விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என தேமுதிக சார்பில் கேட்டுக்கொள்கிறோம்" என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து அரசியல்வாதிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் இவரும் இணைத்து குரல் கொடுத்து வருகிறார்.
English Summary
Housewives felt bad due price gas cylinders Premalatha Vijayakanth