நான் பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை - அரவிந்த் கெஜ்ரிவால் உருக்கம்! - Seithipunal
Seithipunal


டெல்லியில் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.

இதையடுத்து 6 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 13ம் தேதி திகார் சிறையில் இருந்து விடுதலையானார். இதனை தொடர்ந்து  கெஜ்ரிவால் முதலமைச்சர் பதவியை  ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் ஒரு மனதாக டெல்லி முதலமைச்சராக அதிஷியை தேர்வு செய்த நிலையில், அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

தொடர்ந்து ஜந்தர் மந்தரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய கெஜ்ரிவால், முதலமைச்சர் பதவி மீது எனக்கு பேராசையில்லை என்றும், பணம் சம்பாதிப்பதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை என்று கூறினார்.

மேலும், நான் பணம் சம்பாதிக்க விரும்பியிருந்தால், முன்னதாக நான் பணியாற்றிய வருமான வரி துறையில் கோடிக்கணக்கில் நான் சம்பாதித்திருக்க முடியும் என்று கூறிய அவர், நாட்டுக்காகவும், நாட்டின் அரசியலை மாற்றுவதற்காக நான் அரசியலுக்கு வந்தேன் என்று பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

I did not come into politics to make money Arvind Kejriwal Meltdown


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->