என் இஷ்டப்படி தான் செய்வேன் : சீமானின் பேச்சால் நா.த.க -ல் இருந்து விலகிய முக்கிய புள்ளி! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாம் தமிழர் கட்சியில் கடந்த ஆண்டுகளாக என்னால் முடிந்த வரை அனைத்து கட்சி பணிகளும் சிறப்பாக செய்தேன் என்றும், 2015-ல் முதன்முதலாக செஞ்சி நகர செயலாளராக நியமிக்கப்பட்டு 2013 தொகுதி செயலாளர் ஆகவும் 2020-ல் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் ஆகவும் மற்றும் 2011 சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராகவும் இருந்தேன். இரண்டு நாடாளுமன்றத் தேர்தல் இரண்டு சட்டமன்றத் தேர்தல் ஒரு உள்ளாட்சித் தேர்தல் என அனைத்து தேர்தலிலும் நான் சிறப்பாக வேலை செய்தேன்.

சீமான் கூறியது:- இந்த தொகுதியில் உள்ள எவருக்கும் நான் பதில் சொல்ல முடியாது மற்றும் நீங்கள் என்னிடம் கேள்வியும் கேட்ககூடாது என் இஷ்டப்படிதான் நான் செய்வேன், நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் உங்களை யாரும் போஸ்டர் ஓட்டவும் சொல்லவில்லை; செலவு செய்யவும் கூறவில்லை என்று கூறினார்.

இந்த நிலையில், அண்ணா நாங்கள் உங்களிடம் கேட்டது பணமே பொருளோ அல்ல எங்களுக்கான மரியாதை மற்றும் எங்களுக்கான அங்கீகாரம் இதுவே உங்களால தர முடியவில்லை. எனவே மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.  நாம் தமிழர் கட்சியில் தற்போது வகிக்கும் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகுகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

I will do as I wish the main point that was taken away from ntk by seeman speech


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->