உயிர் உள்ளவரை நான் அவருக்கு பணியாற்றுவேன்! - விஜய் கட்சியில் இணையும் ரோஜா? - Seithipunal
Seithipunal


சுய லாபத்திற்காக கட்சி மாறுபவர்கள் அரசியலில் நீடிக்க முடியாது  என்று குறிப்பிட்டு, 
விஜய் கட்சியில் இணைய போவதாக வெளியான தகவலுக்கு  நடிகை ரோஜா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரோஜா, தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தார். தனது திருமணத்திற்கு பிறகு  சினிமாவில் இருந்து ஒதுங்கினார். தற்போது ஆந்திராவில்  ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் சுற்றுலாத்துறை அமைச்சராக ரோஜா பதவி வகித்து வந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற அம்மாநில சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி கட்சி படுதோல்வியை சந்தித்தது.

இந்த தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜாவும் படுதோல்வியை சந்தித்தார். இந்த நிலையில், தமிழ்நாட்டில் நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் நடிகை ரோஜா சேரப்போவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதற்கு விளக்கம் அளித்த நடிகை ரோஜா, நடிகர் விஜய் தொடங்கியுள்ள கட்சியில் தான் இணைய இருப்பதாக வரும் செய்திகளை திட்டவட்டமாக மறுத்தார். இது தொடர்பாக பேசியுள்ள ரோஜா, சுயலாபத்திற்காக கட்சி மாறுபவர்கள் அரசியலில் நீடிக்க முடியாது  என்றும், உயிர் உள்ளவரை நான் ஜெகன்மோகன் ரெட்டிக்காகவே பணியாற்றுவேன் என்று தெரிவித்துள்ள அவர், வெற்றி தோல்வி என்பது அனைத்து கட்சி தலைவர்களுக்கும் சாதாரணம்தான் என்று கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

I will serve him as long as I live Roja to join Vijays party


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->