ஆஹா அதிரடி!!!அடுத்த பிறந்தநாளில் கூட்டணி குறித்து சொல்கிறேன்!!! - பிரேமலதா விஜயகாந்த்
I will tell you about the alliance on my next birthday Premalatha Vijayakanth
இன்று தனது பிறந்தநாளை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொண்டாடி வருகிறார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை அரசியல் தலைவர்கள் பலர் தெரிவித்து வருகின்றனர்.
இதை தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் பிறந்தநாளையொட்டி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி பிரேமலதா விஜயகாந்த் கொண்டாடினார்.இதைத்தொடர்ந்து, விஜயகாந்த் இல்லாமல் எனக்கு எந்த விழாவும் வேண்டாம் எனத் தொண்டர்களிடம் எவ்வளவோ கூறினேன்.

ஆனால் அவர்கள்தான் இந்தப் பிறந்தநாள் விழாவை ஏற்பாடு செய்துள்ளனர் என்று தெரிவித்தார். மேலும், அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு 2026 மார்ச் 18-ந்தேதி என்னுடைய அடுத்த பிறந்தநாளன்று தெளிவாகச் சொல்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஆண்டு மார்ச் 20-ந்தேதி அ.தி.மு.க.- தே.மு.தி.க. இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் 5 எம்.பி. தொகுதிகள் மட்டுமே ஒதுக்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தில் எந்த இடத்திலும் ராஜ்யசபா சீட் பற்றிக் குறிப்பிடப்படவில்லை எனக் கூறப்படுகிறது.தே.மு.தி.க.விற்கு ராஜ்யசபா சீட் என அ.தி.மு.க. சார்பில் இதுவரைக் குறிப்பிடப்படவில்லை. தே.மு.தி.க.வினர் மட்டுமே தங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் எனப் பேசி வருவதாக அ.தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
I will tell you about the alliance on my next birthday Premalatha Vijayakanth