1,200 பேருக்கு உயர் கல்வி, ரூ10 லட்சத்திற்கு காப்பீடு.!! வாக்குறுதிகளை வாரி வழங்கிய பாரிவேந்தர்.!! - Seithipunal
Seithipunal


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் தான் நிறுவன தலைவர் பாரிவேந்தர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

அதில், லால்குடி குளித்தலையில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க முயற்சி எடுக்கப்படும்.

துறையூரில் உள்ள பச்சைமலையில் சைனிக் பள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வேந்தர் இலவச உயர் கல்வித் திட்டம் மூலம் 1,200 மாணவர்களுக்கு இலவச உயர் கல்வி வழங்கப்படும்.

படித்த இளைஞர்களுக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படும்.

இளைஞர்களுக்கு 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் திறன் மேம்பாட்டு மையங்கள் தொடங்கப்படும்.

ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் போதை மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்படும்.

பெரம்பலூர் தொகுதிக்குட்பட்ட ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்படும்.

1500 ஏழைக்கு குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் மதிப்பில் இலவச சிகிச்சை மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.

மண்ணச்சநல்லூர் பொன்னி அரிசி, பெரம்பலூர் சின்ன வெங்காயத்திற்கு புவிசார் குறியீடு.

காவிரி நீரை சேமிக்க தடுப்பணை கட்டப்படும்

விளையாட்டு மைதானத்துடன் கூடிய உடற்பயிற்சி மையம் அமைக்க நடவடிக்கை

மகளிர் சுய தொழில் தொடங்க பயிற்சி வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்கு உறுதிகளை வழங்கி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ijk manifesto released for loksabha election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->