தமிழகத்தில் குழந்தைகளை சுமக்கும் குழந்தைகள்! ஈவெராவின் பேத்திகள், திராவிட மாடல் கருத்துதான் காரணம் - அர்ஜுன் சம்பத் காட்டம்!
IMK Arjun Sambath Condemn to EVR pa Ranjith Vetrimaran
தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளில், கருத்தரித்த தாய்மார்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து இருந்தாலும், இளவயது (18 வயது நிறைவடையாத சிறுமிகள்) கர்ப்பம் அதிகரித்து இருக்கிறது. அதன்படி,
2019-2020 ஆண்டில் 11,772 என்ற எண்ணிக்கையில் இருந்த இளவயது கர்ப்பம்,
2023-2024 ஆம் ஆண்டில் 14,360 ஆக உயர்ந்துள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது (2023-2024 ஆம் ஆண்டில் மட்டும் 13 முதல் 19 வரையிலான 14,360 பெண்கள் கருத்தரித்து இருக்கிறார்கள்).
அதாவது, 20 விழுக்காடு அதிகரித்துள்ளது. 2023-2024 ஆம் ஆண்டில் கருத்தரித்த தாய்மார்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் 1.5 விழுக்காடு இளவயது கர்ப்பம் என்பது மிக அதிகம்.
இந்த ஆய்வறிக்கையையும், 'பேர்ட் கேர்ள்' திரைப்பட கதை கருவையும் சுட்டிக்காட்டி இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
"வெற்றிமாறன்,விஜய் சேதுபதி,
பா ரஞ்சித், ஆதரிக்கும் பேர்ட் கேர்ள் திரைப்படம்!
ஈவெரா வின் பேத்திகள் என்கிற புகழாரம்!
கட்டற்ற பாலியல் சுதந்திரம், திருமணம் கடந்த உறவு, என்ஜாய்மென்ட் வித்அவுட் ரெஸ்பான்ஸ்பிலிட்டி, போன்ற திராவிட மாடல் கருத்துக்கள்! இளம் பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் குடும்ப அமைப்பு முறையையும் அழித்து வருகிறது!
பெண் குழந்தைகளை காப்போம்! படிக்க வைப்போம்! என்கிற பாரத பிரதமர் நரேந்திர மோடியின் திட்டத்தை இன்னும் சிறப்பாக அமல்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளர்.
English Summary
IMK Arjun Sambath Condemn to EVR pa Ranjith Vetrimaran