காமராஜருக்கு பின் இபிஎஸ்! 2026-ல் விஜய்க்கு ஆதரவு? பிரபல அரசியல் கட்சி தலைவர் பேட்டி! - Seithipunal
Seithipunal


இந்து மக்கள் கட்சின் தலைவர் அர்ஜுன் சம்பத் இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது, "தமிழகத்தில் வருகிற 2026 சட்டமன்றத் தேர்தல் நிச்சயமாக சித்தாந்தம் ரீதியான தேர்தலாக தான் அமையும்.

ஜோசப் விஜய் அவர்களின் அரசியல் வருகை அவரது கொள்கை முரண்பாடுகள் கொண்டதாக உள்ளது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா என்பது சனாதனம் ஈவெரா சேர்த்து இருப்பது பிரிவினை ஏற்ப்படுத்தும். விஜய் நல்லது செய்தால் வரவேற்போம் கெட்டது செய்தால் எதிர்ப்போம்.

தமிழகத்தில் காமராஜருக்கு பிறகு திராவிட கட்சிகளிலேயே நாட்டை ஆண்ட சிறந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான். இருப்பினும் தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் திராவிட அரசியலுக்கு மாற்று இன்னொரு திராவிட கட்சிகள் கிடையாது மாற்றம் என்பது கழகங்கள் இல்லா தமிழகம்.

ஆகையால் ஜோசப் விஜய் அரசியல் வருகை தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது. எனவே, தமிழகத்தில் வரக்கூடிய தேர்தலில் திமுக மற்றும் பாஜக இடையே தான் போட்டி நிலவும்" என்று தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IMK Arjun sambath say ADMK EPS TVK Vijay DMK BJP


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->