மேற்கு வங்கத்தில் வன்முறைகள் குறித்து பாஜக சமர்ப்பித்த முக்கிய பரிந்துரைகள் !! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் நடந்து முடிந்த 18 வது மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து பாஜகவின் உண்மை கண்டறியும் குழு தனது அறிக்கையை பாஜக தலைமையிடம்  சமர்ப்பித்துள்ளது. அந்தக் குழு பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவிடம் அறிக்கை சமர்ப்பித்தது. 

அந்த அறிக்கையில் வன்முறையைத் தடுக்கவும், மாநிலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் குழு பல பரிந்துரைகளை தெரிவித்துள்ளது. உள்ளூர் மட்டத்தில் மத்திய பாதுகாப்புப் படைகளை நிறுத்தவும், அவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் குழு பரிந்துரைத்துள்ளது.

மாநிலத்தில் உள்ள அனைத்து பாஜக அலுவலகங்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அனைத்து ஆணையங்களும் மாநிலத்திற்குச் சென்று புகார்களை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத்தில் மத்தியப் படைகள் குவிக்கப்படுவதை நீட்டிக்க வேண்டும். உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதுடன், அந்த வழக்குகளின் விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும். 

இதுபோன்ற பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளதுடன், சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சுத்தம் செய்யாமல், குப்பை கொட்டப்படுகிறது. இதை செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் பல பரிந்துரைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

தற்போது அந்த பாஜகவின் உண்மை கண்டறியும் குழுவில் திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லப் குமார் தேப் இடம்பெற்றுள்ளார். மேலும் இந்த குழுவில் முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி.யுமான ரவிசங்கர் பிரசாத், உ.பி., முன்னாள் டி.ஜி.பி.யும், ராஜ்யசபா எம்.பி.யுமான பிரிஜ்லால், ராஜ்யசபா எம்.பி., கவிதா படிதார் ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். 

இந்த குழு தேசிய தலைவர் ஜேபி நட்டாவால் அமைக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, மேற்கு வங்கத்தில் வன்முறைச் செய்திகள் வெளிவந்தன. இதையடுத்து, சில நாட்கள் அங்கு மத்தியப் படைகள் நிறுத்தப்பட்டன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Important recommendation made by BJP on violence in West Bengal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->