தேசியக் கொடியாக ஒரு நாள் கண்டிப்பாக காவி கொடி பறக்கும்-அமைச்சரின் பேச்சால் பரபரப்பு.!
In future National flag will be kavi flag
காவிக்கொடி ஒருநாள் நிச்சயம் தேசிய கொடியாக மாறும் என்றும், தேசிய கொடி கம்பத்தில் காவி கொடியை ஏற்றியது என்ன தவறு உள்ளது என்று கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா இன்று பெங்களூருவில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தேசிய கொடி கம்பத்தில் காவி கொடி ஏற்றப்பட்ட விவகாரம் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் ஈஸ்வரப்பா இது சர்ச்சைக்குரிய விஷயமே கிடையாது என்று பதிலளித்துள்ளார். மேலும் கொடிக்கம்பம் என்பது பொதுவானது அதில் எப்போதும் தேசியக்கொடியை மட்டுமே ஏற்றப்படுவது கிடையாது என்று பதில் அளித்துள்ளார். அதேபோல் கன்னட நாடு பிறந்தநாளில் கொடிக்கம்பத்தில் கர்நாடக கொடி ஏற்றப்படுவது குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நேற்று காவி கொடி ஏற்றப்பட்டுள்ளது என்றாவது ஒருநாள் 200 வருடங்கள் அல்லது 500 வருடங்கள் கழித்து நிச்சயம் காவி கொடி தேசியக் கொடியாக மாறலாம். ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டவே முடியாது என்று கூறி வந்த நபர்களுக்கு இன்று ராமர் கோயில் கட்டப்பட்டு அதற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல்தான் இதுவும் விரைவில் நடக்கக் கூடும் என கூறியுள்ளார்.
English Summary
In future National flag will be kavi flag