புதுச்சேரியில் சாலைகளில் படுத்து  இந்தியா கூட்டணி கட்சியினர் மறியல் : 300க்கும் மேற்பட்டோர் கைது! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில்  கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், மக்களவை தேர்தல் முடிந்த பின்னர்  ஜூன் 16-ம் தேதி முன்தேதியிட்டு மின் கட்டண உயர்வை அரசு அமல்படுத்தியது.

மின் கட்டண உயர்வுக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் கடந்த 2-ம் தேதி ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதை தொடர்ந்து,  18-ம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தனர்.

இந்த நிலையில், இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் கடலூர் சாலையில் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை சதுக்கம் அருகே தி.மு.க. மாநில அமைப்பாளர் சிவா, காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் தலைமையில்  மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மேலும், போராட்டத்தின் போது அவ்வழியாக வந்த  அரசு பேருந்துகளை வழிமறித்தும்,  சாலையில் படுத்து கோஷங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பையும் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதன் காரணமாக கடலூர், விழுப்புரம் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In Puducherry the Allies of India protest by lying on the roads more than 300 people arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->