'அஞ்சி நடுங்கும் எதிர்க்கட்சி அதிமுக; தமிழக அரசியலில் 02-ஆம் இடத்திற்குதான் போட்டி'; முதலமைச்சர் பேச்சு..!
In Tamil Nadu politics it is competing for the 02nd place Chief Minister's speech
சென்னையில் நடைபெற்ற ரம்ஜான் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது; தமிழக அரசியலில் முதலிடத்தில் திமுக உள்ளது. 02-ஆம் இடத்திற்குதான் போட்டியுள்ளது என்று குறிப்பிட்டார். அத்துடன், எடப்பாடி பழனிசாமி கார் மாறி மாறி போனதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குங்கள் என்று அதிமுகவினர் கூறினர் என்றும் தெரிவித்தார்.
அந்த அளவிற்கு அஞ்சி நடுங்கும் எதிர்க்கட்சியாக அதிமுக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டதோடு, ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சிறுபான்மை மக்களுக்கு எப்போதும் திமுக பாடுபட்டு வருகிறது. இஸ்லாமியர்களையும் திமுகவையும் யாராலும் பிரிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
அத்துடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக எது நடந்தாலும் முதலில் கொடுப்பது திமுகதான். வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து தனித்தீர்மானம் கொண்டு வந்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.
English Summary
In Tamil Nadu politics it is competing for the 02nd place Chief Minister's speech