டிஜிட்டல் தகவல் பாதுகாப்பு சட்டப்பிரிவுக்கு 'இண்டி' கூட்டணி எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு..!
Indi alliance opposition parties oppose the Digital Information Protection Act
டிஜிட்டல் தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்டத்தின், 44 - 3 பிரிவானது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின், 8 - 1 - ஜே பிரிவு வழங்கும் விதிவிலக்குகளை ரத்து செய்யவுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வரும் நிலையில், எதிர்க்கட்சிகளின், இண்டி கூட்டணியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, காங்கிரசின் லோக்சபா துணைத் தலைவர் கவுரவ் கோகோய் உட்பட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் நேற்று டில்லியில் நிருபர்களை சந்தித்தனர். இதன் போது கவுரவ் கோகோய் கூறியுள்ளதாவது:

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் 8 - 1 - ஜே பிரிவானது, தனிநபர் தகவல்களை வெளியிடுவது அத்துமீறல் என்று கூறியுள்ளது. அதே நேரத்தில், பொதுநோக்கம் இருக்கும் பட்சத்தில், அந்த தனிநபர் தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டும் என்று கூறுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், புதிதாக அறிமுகமாகியுள்ள டிஜிட்டல் தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டத்தின், 44 - 3 பிரிவானது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் 8 - 1 - ஜே பிரிவை ரத்து செய்யும் வகையில் உள்ளது.

அதாவது பொது நோக்கமாக இருந்தாலும், சில குறிப்பிட்ட தகவல்களை வெளியிட முடியாது என்று கூறப்படுகிறது. இது ஆபத்தாக முடிந்து விடும். சில குறிப்பிட்ட தனிநபர் தொடர்பான விபரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெற முடியாது என்று கவுரவ் கோகோய் தெரிவித்துள்ளார்.
அதனால், இந்த புதிய சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும் எனவும், இது தொடர்பாக, இண்டி கூட்டணியில் உள்ள, 120 எம்.பி.,க்கள் கையெழுத்திட்டு கூட்டாக கோரிக்கை மனுவை தயாரித்துள்ளோம் என்று அவர் கூறியுள்ளார். அத்துடன், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் அந்த மனுவை வழங்க உள்ள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Indi alliance opposition parties oppose the Digital Information Protection Act