பிரதமர் வேட்பாளர் யார்? டெல்லி புறப்படும் முக ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


ஜூன் 1ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் இண்டி கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின், டெல்லி செல்ல உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடைசிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நாளான ஜூன் 1ல் இந்தியா கூட்டணி தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை மேற்கொள்கின்றனர். அப்போது இண்டி கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகிய நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலினும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. 

7 கட்டங்களாக நடந்து வரும் நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு 6 கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், வரும் 1-ந்தேதி இறுதியாக 7-வது கட்டமாக 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.

அடுத்த மாதம் (ஜூன்) 4-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு ஆண்ட்ரே முடிவுகள் அறிவிக்கப்படும். மொத்தம் உள்ள 543 இடங்களில் 272 இடங்களை பெறும் கட்சி ஆட்சி அமைக்கும்.

இந்நிலையில், வரும் 1-ந்தேதி இண்டி கூட்டணி கட்சி தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை நடத்தவுள்ளனர். காங்கிரஸ், தி.மு.க., சமாஜ் வாடி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவ சேனா, ராஷ்டீரிய லோக் தளம் உள்பட 28 கட்சிகளின் தலைவர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வருகிற 1-ந்தேதி டெல்லிக்கு செல்ல உள்ளார். கூட்டம் முடிந்து  2-ந்தேதி சென்னை திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indi Alliance PM Candidate Delhi MKStalin


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->