மீண்டும் ஊழல் செய்யவே இண்டியா கூட்டணி வாய்ப்பு கேட்கிறது - பிரதமர் மோடி!! - Seithipunal
Seithipunal


மீண்டும் ஊழல் செய்யவே இந்த தேர்தலில் இண்டியா கூட்டணி வாய்ப்பு கேட்கிறது என ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்துள்ளார்.

 மக்களவைத் தேர்தலில் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் இறுதி கட்ட தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. இறுதிக்கட்ட மக்களவை தேர்தல் ஜூன் ஒன்றாம் தேதியும், அதனைத் தொடர்ந்து ஜூன் நான்காம் தேதி மக்களவை தேர்தல்கான தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. அதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் இறுதிக்கட்டம் மக்களவை தேர்தலுக்கு தயாராகி உள்ளது.

 அந்த வகையில், ஜார்கண்ட் மாநிலம் தும்கா பகுதியில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். மக்கள் இடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நரேந்திர மோடி பேசுகையில், கடந்த 2014ஆம் ஆண்டு நீங்கள் என்னை ஆதரித்தீர்கள் அதனால் நான் பிரதமர் ஆனேன். காங்கிரசின் தவறான ஆட்சியில் நாடு சோர்ந்து போய் இருந்தது. ஒவ்வொரு நாளும் ஊழல்கள் நடந்தன. இப்பொது,பொது மக்களின் பணம் மக்களின் நலனுக்காக பயன்படுகிறது.

தொடர்ந்து பேசிய நரேந்திர மோடி, பத்து ஆண்டுகளில் பாஜக செய்த பணிகளை அடுத்த ஐந்தாண்டுக்கு முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் மூன்று கோடி தாய்மார்களையும் சகோதரிகளையும் லட்சாதிபதி ஆக்குவதே எனது உறுதி. மீண்டும் பாஜக ஆட்சி அமைந்த பிறகு ஏழைகளுக்கு மூன்று கோடி வீடுகள் கட்டி தரப்படும். மீண்டும் ஊழல் செய்யவே இண்டியா கூட்டணி வாய்ப்பு கேட்கிறது என கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India Alliance again corruption ask for opportunity


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->