டெல்லி : இந்தியா கூட்டணித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்..!! தமிழகத்தில் இருந்து யார் கலந்து கொண்டார்கள் தெரியுமா?! - Seithipunal
Seithipunal


பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து வரும் ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். இதையடுத்து அன்று இரவே புதிதாக ஆட்சியமைக்கப் போவது யார் என்று தெரிந்து விடும். 

காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களும் தங்கள் கூட்டணி தான் வெற்றி பெறும் என்று உறுதியாக உள்ளனர். இந்நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் இல்லத்தில் இந்தியா கூட்டணித் தலைவர்களின் ஆலோசனை நடைபெற்று வருகிறது. 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஆம் ஆத்மீ அரவிந்த் கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் சரத் பவார், மற்றும் சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இருந்து டி. ஆர். பாலு கலந்து கொண்டுள்ளார். மேலும் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல தலைவர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் என்னென்ன ஆலோசிக்கப்பட்டது என்பது குறித்து இன்னும் சிறிது நேரத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

INDIA Alliance Leaders Meeting in Delhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->