'இது பாஜகவின் கூட்டாளிகளுக்கான பட்ஜெட்' - பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிர்க் கட்சிகள்..!! - Seithipunal
Seithipunal


நேற்று தாக்கல் செய்யப்பட மத்திய பட்ஜெட் பாரபட்சமாக உள்ளதாகக் கூறி பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க் கட்சி எம். பி. க்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

நேற்று (ஜூலை 23) மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதையடுத்து பட்ஜெட் மீதான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டது. இதையடுத்து பட்ஜெட் பாரபட்சமாக உள்ளதாகக் கூறி இந்தியா கூட்டணி எம். பி. க்கள் பாராளுமன்ற வளாகத்தில் காலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, திமுக எம். பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா, சமாஜ்வாடியின் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பட்ஜெட்டுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். 

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "இந்த பட்ஜெட்டை அவர்கள் யாருக்கும் கொடுக்கவில்லை, மாறாக அவர்கள் கூட்டாளிகளுக்கு மட்டுமே கொடுத்துள்ளனர். இதை நாங்கள் தொடர்ந்து எதிர்க்கிறோம்" என்று தெரிவித்தார். 

இதுகுறித்து சமாஜ்வாடி கட்சி எம். பி. அகிலேஷ் யாதவ், "இந்த பட்ஜெட்டில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப் படவில்லை. உத்திரப்பிரதேசத்திற்கு எந்த பலனும் இந்த பட்ஜெட்டால் இல்லை. மேலும் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கோரியிருந்தோம். ஆனால் தங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு மட்டும் கொடுத்து தங்கள் ஆட்சியைக் காப்பாற்றிக் கொண்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

INDIA Alliance MPs Protest in Parliament Over Union Budget


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->