இந்திய கூட்டணி கட்சியினர் வாக்குப்பதிவு எந்திரங்களால் நாங்கள் தொற்று விட்டோம் என்று கூறுவார்கள் - அமித்ஷா கலாய்!!
Indian alliance will say we are infected by voting machines
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறவுள்ளது. அன்று பிற்பகல் இரண்டு இளவரசர்கள் ( ராகுல் காந்தியும் ,அகிலேஷ் யாதவ் ) இணைந்து செய்தியாளர்களை சந்தித்து, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களால் நாங்கள் தொற்று விட்டோம் என கூறுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பரப்புரையில் பேச்சு.
மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் ஜூன் 1ம் தேதி 7ம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து ஜூன் 4ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது.
இறுதிக்கட்ட மக்களவை தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. அதனை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் தீவிர இறுதி கட்ட பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மத்திய உள்துறை அம அமைச்சர் அமித்ஷா மக்கள்கிடையே பேசுகையில்,
நாடாளுமன்ற தேர்தலில் 5 கட்டங்களியே பிரதமர் மோடி 310 இடங்களை கடந்துவிட்டார்.காங்கிரஸ் 40 இடங்களை கூட பெறமாட்டார்கள். பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர்.பாஜகவினருக்கு அணுகுண்டுகளை கண்டு பயம் இல்லை.காஸ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும்.
தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர், நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறவுள்ளது. அன்று பிற்பகல் இரண்டு இளவரசர்கள் ( ராகுல் காந்தியும் ,அகிலேஷ் யாதவ் ) இணைந்து செய்தியாளர்களை சந்தித்து,மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களால் நாங்கள் தொற்று விட்டோம் என கூறுவார்கள். தங்கள் தோல்விக்காக வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது பழிபோட முடிவு செய்து இருக்கிறார்கள் என்று கூறினார்.
English Summary
Indian alliance will say we are infected by voting machines