ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்த  கர்நாடக மருத்துவ மாணவர் நவீன் சேகரப்பாவுக்கு மருத்துவர் இராமதாஸ் இரங்கல்.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் போரில் கர்நாடகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் உயிரிழப்புக்கு, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மருத்துவர் இராமதாஸ் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், 

"உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் கர்நாடகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் நவீன் சேகரப்பா உயிரிழந்தார் என்பதை அறிந்து வேதனையடைந்தேன்.  அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும்  கியெவ் மற்றும் கார்கிவ் நகரிலிருந்து இந்திய மாணவர்கள் வெளியேற முடியவில்லை என்று செய்திகள் வெளிவருகின்றன. ஆபத்தான அந்த நகரங்களில் இருந்து இந்திய மாணவர்கள் விரைந்து மீட்க நடவடிக்கைகள்  எடுக்கப்பட வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுபோல் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் இரங்கல் செய்தியில், "உக்ரைனின் #கார்கிவ் என்ற இடத்தில் இன்று காலை கர்நாடகாவைச் சேர்ந்த நவீன் என்ற இந்திய மாணவர் ஷெல் தாக்குதலில் உயிரிழந்தார் என்ற செய்தி வருத்தமும் ஏமாற்றமும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian student Naveen from Karnataka lost his life in shelling at Kharkiv


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->