உலக நாடுகளின் கவனம் ஈர்த்த இந்தியாவின் தேசிய சின்னம் : திறந்து வைத்தார் பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal


புதிய பாராளுமன்ற கட்டிடம் மத்திய விஸ்டா மறு அபிவிருத்தி திட்டத்தின் கீழ், டாடா நிறுவனம் சார்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த புதிய பாராளுமன்ற கட்டிடம் ரூ.971 கோடி செலவில் அதிநவீன வசதியுடன் அமைக்கப்படுகிறது. 

மேலும், இந்த புதிய பாராளுமன்ற கட்டிடம் எதிர்காலத்தில் மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும் அமர்வதற்கு ஏற்ற வகையில்  அமைக்கப்படுகிறது. இந்த புதிய கட்டிடத்தில் பாராளுமன்ற  கூட்டத்தின் போது 1,224 உறுப்பினர்கள் பங்கேற்கும் வகையில் கட்டப்படுகிறது.

இந்த புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் இந்திய ஜனநாயகத்தின் பெருமையை இந்த உலகத்திற்கு எடுத்துக்காட்டும் வகையில் அரசியல் சாசன அரங்கம் என்ற பெயரில் பெரிய அரங்கம் ஒன்று அமைக்கப்படுகிறது. 

மேற்கொண்டு நூலகம், கட்சி அலுவலகங்கள், பல்வேறு நிலைக்குழு அலுவலகங்கள், வாகன நிறுத்துமிடங்கள், உணவு உண்ணும் அரங்குகள், என எண்ணற்ற வசதிகளைக் கொண்டிருக்கும் வகையில் இந்த புதிய பாராளுமன்ற கட்டிடம்  கட்டப்படுகிறது. 

பிரதமர் நரேந்திர மோடி, புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில்  இன்று காலை 6.5 மீட்டர் உயரமுள்ள வெண்கல தேசிய சின்னத்தை  திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indias National Symbol Prime Minister Modi inaugurated


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->