அண்ணாமலைக்கு ஆப்பு ரெடி? டெல்லிக்கு பறந்த லிஸ்ட்.. கோவையில் பரபர.!!
Info BJP conferance regards Annamalai admk alliance issue
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுக தலைவர்களை சீண்டி வந்ததால் இத்தகைய முடிவை எடுத்தது அதிமுக. பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டது நாடகம் என திமுக குற்றம் சாட்டில் வரும் நிலையில் கூட்டணி முறிந்தது.. முறிந்தது தான்.. என அதிமுக தரப்பு கூறி வருகிறது.
இத்தகைய சூழலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த தமிழ் மாநில காங்கிரஸ் தனது கூட்டணி நிலைப்பாட்ட இன்னும் அறிவிக்காமல் உள்ளது. பொதுக்குழு கூறி வரும் பிப்ரவரி 12ஆம் தேதி தனது கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கப் போவதாக ஜி.கே வாசன் அறிவித்துள்ளார்.
முன்னதாக டெல்லி பாஜகவின் அறிவுறுத்தலின்படி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் ஜி.கே. வாசன் சந்தித்து பேசியதாகவும் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைய வேண்டும் என அவர் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அதற்கு பிடி கொடுக்காத எடப்பாடி பழனிச்சாமி பாஜக உடனான கூட்டணியை முறிக்க என்னென்ன காரணம் என ஒரு பட்டியலை ஜி கே வாசன் இடம் வழங்கியதாகவும் அதனை டெல்லி பாஜக தலைமைக்கு ஜி கே வாசன் அனுப்பி இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இத்தகைய பரபரப்பான சூழலில் இன்று தமிழகம் வருகிறார். பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல் சந்தோஷ். கோவையில் நடைபெறும் பாஜக கூட்டணி தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பல முக்கிய நிர்வாகிகளை சந்திக்கும் பி.எல் சந்தோஷ் பாஜக தலைமை ஏற்று வரும் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு தேர்தல் பிரச்சாரம் குறித்து விரிவான ஆலோசனை நடத்த உள்ளார்.
மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக தரப்பு வழங்கி உள்ள பட்டியல் குறித்து மூத்த பாஜக நிர்வாகிகளுடன் பி.எல் சந்தோஷ் விரிவான ஆலோசனை நடத்தப்பட உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Info BJP conferance regards Annamalai admk alliance issue