பெரம்பலூர் தொகுதியில் அமைச்சரின் வாரிசு.? திமுக நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை.!!
info minister kn nehru son to contest in perambalur
கடந்த நாடாளு மன்ற தேர்தலில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பச்சமுத்து என்கிற பாரிவேந்தர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அவர் பாஜகவுடன் நெருக்கம் கட்டிவருவதால் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அமைச்சர் கே.என் நேருவின் மகன் அருண் நேருவுக்குதிமுக மேலிடம் தேர்தலில் வாய்ப்பு வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியானது. அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அருண் நேரு பெரம்பலூர் மாவட்ட திமுக நிர்வாகிகளை நேரில் சென்று சந்தித்து அவர்களுடன்ஆலோசனை நடத்தியுள்ளார்.
அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் அருண் நேருவை அரசியலுக்கு வரவேந்தும் என நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்த முழுநேர அரசியலில் இறங்கினர். இந்த நிலையில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக்கி டெல்லிக்கு அனுப்பி வைக்க முயற்சித்து வருகிறது நேரு தரப்பு. திருச்சியில் ஏற்கனவே அமைச்சர்கள் அன்பில் மகேஷ், கே.என்.நேரு இடையே அதிகார போட்டி தொடரும் இந்த சூழலில் அருண் நேருவையும் திருச்சியில் களமிறக்க திமுக தலைமை விரும்பவில்லை.
இதனால் தான் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட அருண் நேருவும் ஆர்வம் காட்டி வருகிறார் என்கின்றனர் திமுக உடன்பிறப்புகள். நேருவை போலவே கட்சியினர் இல்ல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதோடு, தினமும் அலுவலகம் சென்று பார்வையாளர்களை சந்திக்கிறார் அருண் நேரு. முதலில் மகனை அரசியலுக்கு அழைத்து வர அமைச்சர் நேரு மிகவும் தயங்கினார். ஆனால் ஆதரவாளர்கள் கொடுத்த ஆதரவால் மகன் அரசியல் வருகைக்கு நேரு ஆட்சேபனை தெரிவிக்கவில்லையாம். பெரம்பலூர் தொகுதியை பொறுத்தவரை இதற்கு முன்னர் 2009-2014ல் அமைச்சர் நேருவின் அக்கா மகன் நடிகர் நெப்போலியன் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய இணை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
info minister kn nehru son to contest in perambalur