மீண்டும் அரசியல்... ஆளுநர் பதவிகள் ராஜினாமா.. மாஸ் என்ட்ரி தரும் தமிழிசை .!! - Seithipunal
Seithipunal


முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராகவும் புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராகவும் மத்திய அரசால் நியமிக்கப்பட்டார். 

தேர்தல் அரசியலில் மிகவும் ஆர்வமாக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன் திடீரென இரு மாநிலங்களுக்கும் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தெலுங்கானா ஆளுநராகவும் 2021 ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராகவும் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் எதிர்வரும் மக்களவை பொதுத் தேர்தலில் போட்டியிட தமிழிசை சௌந்தரராஜன் விருப்பம் தெரிவித்துள்ளதால் அவர் தனது இரு ஆளுநர் பதவிகளையும் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

நாளை மறுநாள் தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ள இத்தகைய சூழலில் தனது ஆளுநர் பதவிகளை தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்வது தேர்தலில் போட்டியிடவே என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜக சார்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தல் மற்றும் 2006, 2011, 2016 ஆகிய சட்டமன்ற தேர்தலிலும் தமிழிசை சௌந்தரராஜன் கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலில் கனிமொழிக்கு எதிராக தூத்துக்குடியில் நின்று தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Info Tamilisai resigning both Telangana and puducherry governor post


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->