மது விற்று வரும் பணத்தில் ரம்ஜானுக்கு அரிசி கொடுக்க வேண்டாம் - பிரபல கட்சியின் மாநில தலைவர் அதிரடி அறிவிப்பு.!
INLP say about ramalan
இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ரஹீம் இன்று விடுத்துள்ள அறிக்கையில், "ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 6,000 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது
ஆனால் ஒவ்வொரு பள்ளிவாசல்களும் ஜமாத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் முஸ்லீம் வீடுகளில் நோன்பு கஞ்சி தயாரிக்க அந்தந்த ஜமாத் நிர்வாகம் வசூல் செய்து நோன்பு கஞ்சி தயாரித்து நோன்பு இருக்கும் முஸ்லீம்களுக்கு வினியோகித்து வருகின்றனர்
கடந்த நான்கு , ஐந்து ஆண்டுகளாக தான் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின் கீழ் நோன்பு கடைபிடிக்கப்படும் நாட்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், 90 % சதவீதத்திற்கு மேல் உள்ள பெரும்பாலான பள்ளிவாசல்கள் தமிழக அரசு வழங்கும் இந்த நோன்பு கஞ்சி அரிசியை பயன்படுத்துவது இல்லை என்பதை தமிழக அரசு கவணத்தில் கொள்ள வேண்டும்.
அல்லது மது விற்பனை மூலம் வரும் வருமானத்திலோ, வட்டி பணத்திலோ மற்றும் தடுக்கப்பட்ட வேறு எந்த வழியில் வரும் வருமானத்திலும் கஞ்சி செய்து சாப்பிட நோன்பாளிக்கு தடுக்கப்பட்டு உள்ளது.
ஆகையால் முஸ்லீம்களுக்கு இலவசமாக தமிழக அரசு வழங்க உள்ள ரமலான் நோன்பு கஞ்சி பச்சரிசியை உடனே நிறுத்த வேண்டும் என மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம்.
ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு கொடுக்க உள்ள 6,000 மெட்ரிக் டன் பச்சரிசையை பொருளாதார நெருக்கடியால் பசி பட்டினியோடு இலங்கையில் இருந்து தமிழகம் வரும் இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு வழங்கலாம் என்பது இந்திய தேசிய லீக் கட்சியின் கோரிக்கை வைக்கிறது."
இவ்வாறு அந்த அறிக்கையில் தடா ஜெ.அப்துல் ரஹிம் தெரிவித்துள்ளார்.