மைக்கேல்பட்டி கிராமத்தை உள்ளடக்கிய தஞ்சை திருக்காட்டுபள்ளி பேரூராட்சி வெற்றியை பாஜகவுக்கு சுட்டிக்காட்டிய இஸ்லாமிய கட்சி.!
INTJ SAY ABOUT THIRUKATTUPALLI DMK VICTROY
பிரித்தாளும் மதவெறி கூச்சலுக்கு தமிழகத்தில் இடமில்லை என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கருத்து தெரிவித்துள்ளது.
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள பெரும்பான்மை மாநாகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை திமுக கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது.
இதற்கு இடையில் பாஜகவில் பல மதவெறி கூச்சல்களை தமிழக மக்கள் நிராகரித்துள்ளனர் என்று, இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைப் பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார், அவரின் அந்த பதிவில்,
"மாணவியின் தற்கொலையை வைத்து பாஜக மதகலவரம் ஏற்படுத்த நினைத்த மைக்கேல்பட்டி கிராமத்தை உள்ளடக்கிய தஞ்சை திருக்காட்டுபள்ளி பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.
மதுரை மேலூரில் ஹிஜாப் சர்ச்சை செய்த பாஜக அந்த வார்டில் 10 ஓட்டுக்கள் வாங்கி டெபாசிட்டை இழந்துள்ளது.
தமிழக மக்கள் பிரித்தாளும் மதவெறியின் வெற்று கூச்சலுக்கு எப்போதும் செவிசாய்க்கமாட்டார்கள்." என தெரிவித்துள்ளார்.
English Summary
INTJ SAY ABOUT THIRUKATTUPALLI DMK VICTROY