இது தான் காரணமா?...ஆளுநரின் பட்டமளிப்பு விழாவும், அமைச்சர்களின் புறக்கணிப்பும்!
Is this the reason governor graduation ceremony and ministers neglect
மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 56-வது பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு 54,714 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களுக்கான சான்றிதழ்களை வழங்கினார்.
இந்த விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் புறக்கணித்தார். இது தொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கவர்னரின் செயலும், பேச்சும் தமிழர்களின் மனம் புண்படும்படி இருந்து வரும் காரணத்தால், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்து புறக்கணித்திருத்ததாக தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 31-வது பட்டமளிப்பு விழாவில் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் நிலையில், இந்த விழாவினை புறக்கணிப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு சென்ற ஆளுநர் ஆர்.என் ரவியின் கவனத்தை இருக்கும் விதமாக போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Is this the reason governor graduation ceremony and ministers neglect