இஸ்ரேலிய அரசே போரை நிறுத்து; ஐ.நா படைகளை அச்சுறுத்தாதே!....இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து சென்னையில் விசிக ஆர்ப்பாட்டம்! - Seithipunal
Seithipunal


கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலின் எல்லையை ஒட்டிய பகுதியில், ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கொண்டு கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த போர் தொடங்கி நேற்றுடன் ஓராண்டு நிறைடைவந்துள்ளது.

இதற்கிடையே, இஸ்ரேல் ராணுவம், காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நோக்கில் போரிட்டு வரும் நிலையில், லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் நாள்தோறும் இஸ்ரேலை  தாக்கி வந்தனர்.  இந்த சூழ்நிலையில்  பல்வேறு வழிகளை கையாண்ட இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், பாலஸ்தீனம், லெபனான், சிரியா ஆகிய நாடுகளில் இனப்படுகொலை செய்யும் இஸ்ரேல் அரசின் பயங்கரவாதத்தை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


வன்மையாக கண்டிக்கின்றோம், இஸ்ரேலிய பயங்கரவாதத்திற்கு துணை போகும் நிலைப்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம், போரை நிறுத்து, இஸ்ரேலிய அரசே போரை நிறுத்து! பாலஸ்தீனம், லெபனான், சிரியா நாடுகளின் மீதான ஏவுகணை தாக்குதலை இஸ்ரேல் அரசு உடனே நிறுத்து என்றும், அமைதி காக்கும் ஐ.நா படைகளை அச்சுறுத்தாதே என்று கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Israel government stop the war do not threaten the un forces vck protest in chennai to condemn the israel attack


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->