அதிமுக மாவட்ட செயலாளர் வீட்டில் ஐ.டி ரெய்டு! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்ய நாராயணா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலின் போது அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் அவரின் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டி மனு தாக்கல் செய்துள்ளதால் அதன் மீது எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

மேலும் எம்எல்ஏவாக இருந்தபோது தொகுதி மேம்பாட்டு நிதியை முறைகேடாக கையாளுவதாகவும் அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது 2 மாதங்களுக்குள் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சத்ய நாராயணன் இல்லத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அதிமுக வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் ராஜேஷ் இல்லத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்ய நாராயணா மற்றும் ராஜேஷ் இருவரும் சேர்ந்து பிரபல ஒற்றை எழுத்து நிறுவனத்துடன் இணைந்து ஆந்திராவில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையில் அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IT raid in AIADMK district secretary Rajesh house


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->