1000 கோடி ரூபாயை மறைத்த சரவணா ஸ்டோர்ஸ்.! போலி பில்., கொள்முதல் மறைப்பு., வெளியான ஐடி அறிக்கை.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள பிரபல வணிக நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸில் மூன்று நாளாக வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தியதில், சுமார் 1000 கோடி ரூபாய் வருமானத்தை மறைத்துள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

சரவணா ஸ்டோர்ஸ் 1970 ஆம் ஆண்டில் ஒற்றைக் கடையாக தொடங்கப்பட்டு பின்னர் சில்லறை விற்பனைக் கடைகளின் சங்கிலித்தொடராக பல கிளைக் கடைகளாக விரிவாக்கம் செய்யப்பட்டது. 

சென்னை, தி நகரில் ஒரு பாத்திரக் கடையாக மட்டும் துவக்கப்பட்டது. இது சிறிதுசிறிதாக வளர்ந்து வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் விற்கும் அங்காடியாக 1998 இல் உருவானது. தற்போது சென்னையில் பல கிளைகள் உள்ளது.

இந்நிலையில், சென்னை புரசைவாக்கம், தியாகராயர் நகர், போரூர், குரோம்பேட்டை பகுதிகளில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடை மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 37 இடங்களில் கடந்த மூன்று தினங்களாக வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர்.

சற்றுமுன் வெளியான வருமான வரித்துறையின் அறிக்கையில், சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.1000 கோடி வருவாயை மறைத்தது அம்பலம் ஆகியுள்ளது.

10 கோடி பணம், 8 கோடி மதிப்பு கொண்ட நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ₹80 கோடி போலி பில் போட்டது அம்பலம் ஆகியுள்ளது. ₹150 கோடிக்கு கணக்கில் கொள்முதல் செய்யப்பட்டது வரவு வைக்காததும் தெரியவதுள்ளது என்று வருமான வரி துறை அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IT REPORT IN SARAVANA STORES


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->